|
| 'தமிழ் கட்டாயப்பாடம் தீர்ப்பு: தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி' |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008 ( 18:01 IST ) | |
'பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியிலே தொடங்கப்பட்டதாயிற்றே, அதற்கு கட்டிடம் கட்ட நாம் ஏன் நிதி ஒதுக்க வேண்டும் என்ற அற்ப புத்தியோடு செயல்படாமல் திமுக அரசு நடந்து கொண்டுள்ளது.
ஆனால், அவசர புத்தியும், கெட்ட நினைப்பும் எப்போதும் கொண்ட அம்மையார் அவசர அவசரமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் என் மூளையில் தானே முதலிலே உதித்தது என்று அறிக்கை விடுத்துள்ளார். அதனால் தான் அது இத்தனை காலம் 'மூலை'யில் கிடந்தது போலும்!
'ஆன்மீகமும்- அறிவியக்கமும், ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று முதல்வர் புதிய உபதேசம் செய்கிறார்; எல்லோரும் குழம்பிப் போய் உள்ளனர்' என்று வைகோ பேசியிருக்கிறார்.
வேலூர் நாராயணி ஆலய விழாவில் நான் பேசியது, 'அறிவியக்கமும், ஆன்மீகமும் இரட்டைக் குழந்தைகள். ஆனால் ஒட்டிப் பிறந்தவை அல்ல' என்ற வாசகமாகும். குழம்பிப் போனவர்கள்தான் இதை குழப்பிக் கொள்கிறார்கள்.
கடந்த 2006ல் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட தமிழ் கட்டாய பாடம் என்ற சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|