|
| அதிமுக இளைஞர் பாசறை மார்ச் 7ல் துவக்கம்: ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008 ( 16:58 IST ) | |
அதிமுகவின் புதிய அமைப்புகளான இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆகியவற்றை அமைக்கும் பணி மார்ச் 7ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைக்கும் பணி அடுத்தமாதம் 7ம் தேதி தொடங்கப்படும்.
பாசறை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்டம் வாரியாக முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது. தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் குழுக்களுக்கு உதவி செய்வதற்காக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சியின் வட்டம், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், பிற அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள் மற்றும் முன்னாள் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த ஒன்றிய, நகர பேரூராட்சிக் குழுக்களில் இடம் பெறுவர்.
மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதி-வட்டம், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் குழுக்களுக்கான பட்டியல் மாவட்டங்களுக்கு பொறுப்பேற்றிருக்கும் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|