யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அரசு கேபிள். டி.வி.யின் நன்மை: சரத்குமாருக்கு கருணாநிதி பதில்
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008   ( 16:23 IST )
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் என்பதை அரசு விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அகில ௦இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் அறிக்கைக்கு, முதல்வர் கருணாநிதி இன்று பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து கேள்வி - பதில் வடிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசினால் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சியில் சிலரது முகங்களை காட்டினால்கூட, 'பாவம்' என்று கூட நினைத்து மறுத்த காலம் ஒன்று உண்டு. தற்போது அதே தொலைக்காட்சியில் அன்றைக்கு புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்களின் முகங்கள் எல்லாம் தாராளமாக காட்டப்படுகின்றன.

அதற்கு, செஞ்சோற்றுக் கடன் கழிக்க வேண்டாமா? அதன் விளைவுதான் அரசுக்கு எதிராக அவர்கள் பெயரால் தற்போது வெளிவரும் சில அறிக்கைகள்.

இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் சரத்குமார் தனது அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருச்செந்தூரில் நாளை மாசித் திருவிழா
பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை: 24ம் தேதி துவக்கம்
திமுக எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு
சாலை விபத்தில் எம்எல்ஏ காயம்
ஆட்சியை கலைப்பது சாதாரண காரியம் அல்ல : கருணாநிதி
அனைத்து பாடங்களிலும் தமிழ் வழி கல்வி : ராமதாஸ் கோரிக்கை
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace