|
| திருச்செந்தூரில் நாளை மாசித் திருவிழா |
| திருச்செந்தூர்(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008 ( 13:47 IST ) | |
மாசித் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனை முன்னிட்டு தினமும் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
எட்டாம் திருநாளையொட்டி நேற்று காலை மேலக்கோவில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.அதன் பின்னர் சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது வழி நெடுகளிலும் திரண்டிருந்த பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.
இந்நிலையில் , இந்த திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.பெரிய தேரில் சுவாமியும், சிறிய தேரில் அம்பாளும் வெளிவீதிகளில் பவனி வருகிறார்கள்.
இந்த தேர்திருவிழாவை காணவும், தேர் இழுக்கவும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வண்ணம் உள்ளனர்.
பக்தர்களின் திரளான வருகையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|