|
| பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை: 24ம் தேதி துவக்கம் |
| பழனி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008 ( 13:27 IST ) | |
பழனியில் வரும் 24ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை துவக்கப்படுகிறது.
பழனியில் பக்தர்களின் வசதிக்காக கீழ் தளத்திலிருந்து மலைக்கோயிலுக்கு எளிதில் செல்லும் வகையில் ரோப் கார் இயக்கப்பட்டு வந்தது. சுமார் 350 மீட்டர் இடைவெளியில் இந்த ரோப்கள் கார்கள் இயக்கப்பட்டு வந்தன.
கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரோப் காரில் பயணம் செய்தபோது, தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது. இதில், இரு பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து, விபத்துகள் ஏற்படாதவண்ணம் ரோப் கார் சேவையை இயக்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக பொறியாளர்கள் அடங்கிய குழு ஒன்று பிற மாநிலங்களில் பாதுகாப்பாக ரோப் கார் இயக்கப்படும் முறைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.
இதன்படி, ரோப் கார் இயக்கத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு, பாதுகாப்பு முறைகள் அதிகரிக்கப்பட்டன. இது பலமுறை முன்னோட்டமும் பார்க்கப்பட்டது.
இதைதொடர்ந்து, வரும் 24ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு 2 நிமிடங்களில் செல்லும் வகையில் இந்த ரோப் கார் இயக்கப்படவுள்ளதாகவும், பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கோயில் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|