யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திமுக எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு
திருச்சி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008   ( 12:22 IST )
மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திமுக எம்.எல்.ஏ.மாணிக்கம் உள்பட அக்கட்சியை சேர்ந்த 11 பேர் மீது கொலை முயற்சி ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையில் நேற்றிரவு மதிமுக பொதுக் கூட்டம் நடந்தது.இதில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசத் தொடங்கியபோது திடீரென ஒரு கும்பல் உள்ளே புகுந்து சரமாரியாக தாக்கத் தொடங்கியது.

உருட்டுக் கட்டைகள், சோடா பாட்டில்களுடன் வந்து தாக்குதல் நடத்திய அக்கும்பல், மேடையில் இருந்த டியூப் லைட்டுகளையும் அடித்து நொறுக்கியது. நாஞ்சில் சம்பத் மற்றும் மேடையில் அமர்ந்திருந்தவர்களை அக்கும்பல் சரமாரியாக தாக்கியது.இதில் சம்பத் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.பலருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு உடனடியாக ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்தும், அது வராமல் போகவே மதிமுகவினர் சாலை மறியலில் இறங்கினர்.

அதனைத் தொடர்ந்தே ஆம்புலன்ஸ் வந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் தம்மை தாக்கியது திமுக அப்பட்டமான கொலை முயற்சி என்று சம்பத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தம்மை தாக்கியது திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையிலான கும்பல்தான் என்று நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டினார்.முதலமைச்சர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடந்ததாக அவர் மேலும் கூறினார்

இதனிடையே மதிமுகவ்னர் அளித்த புகாரின் பேரில் திமுக எம்.எல்.ஏ.மாணிக்கம் உட்பட அக்கட்சியை சேர்ந்த 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சாலை விபத்தில் எம்எல்ஏ காயம்
ஆட்சியை கலைப்பது சாதாரண காரியம் அல்ல : கருணாநிதி
அனைத்து பாடங்களிலும் தமிழ் வழி கல்வி : ராமதாஸ் கோரிக்கை
ஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் 15 பேர் காயம்
'ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி'
கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டாதீர் : சரத்குமார் வலியுறுத்தல்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace