|
| சாலை விபத்தில் எம்எல்ஏ காயம் |
| சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008 ( 12:05 IST ) | |
விழுப்புரத்தில் நிகழந்த சாலை விபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை காயமடைந்தார்.
மங்களூர் தனித் தொகுதி எம்.எல்.ஏ வான செல்வம், அங்கு நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக காரில் சென்றார்.
இவரது கார் விழுப்புரம் மாவட்டம் செங்குறிச்சி கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தது .அப்போது , முன்னால் சென்ற லாரியை முந்த அவரது கார் டிரைவர் முயன்ற சமயம்,எதிரே ஒரு பேருந்து வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு பேருந்து மீது மோதி விடாமல் தவிர்ப்பதற்காக காரை திருப்பியபோது, அருகில் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இதில் செல்வப் பெருந்தகைக்கு காலில் காயம் ஏற்பட்டது.முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|