|
| மன்மோகன் சிங் நாளை பதவியேற்கிறார் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009 ( 12:35 IST ) | |
நாட்டின் பிரதமராக 2வது முறையாக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ராஷ்டிரபதி பவனில் நாளை நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 322 எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மன்மோகன் சிங் சந்தித்தார்.
அப்போது மன்மோகன் சிங்கை பிரதமராக நியமிக்கும் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவரிடம் வழங்கினார். நாளை ராஷ்டிரபதி பவனில் நடக்கும் பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் மன்மோகன் சிங்கிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன.
மத்தியில் அமைய உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இடம்பெறுகின்றன. எனவே, இன்று மாலைக்குள் அமைச்சரவை ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|