|
| ராஜீவ் நினைவிடத்தில் சோனியா, பிரதமர் அஞ்சலி |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009 ( 12:24 IST ) | |
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 18ஆவது நினைவு தினம் இன்று தீவிரவாத எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களிடமும் தீவிரவாதத்தின் ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலை 11 மணியளவில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இளைஞர்கள் தீவிரவாதம், வன்முறையில் இருந்து விலகியிருக்கவும் இந்த நாள் தீவிரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளையொட்டி ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
புதுடெல்லியில் உள்ள வீரபூமியில் அமைந்துள்ள ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜீவின் மனைவியுமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா வதேரா, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ராஜீவ் நினைவு நாளையொட்டி ராஜீவ் நினைவிடம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு பெங்களூருவில் இருந்து ராஜீவ் ஜோதி கொண்டுவரப்பட்டது. வரும் வழியில் இந்த ஜோதி நேற்று புதுச்சேரி வந்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|