|
| மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக நியமனம் |
| வியாழக்கிழமை, 21 மே 2009 ( 10:48 IST ) | |
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட இதர கட்சிகளின் 322 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமராக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நியமனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியுடன் தன்னைச் சந்தித்த மன்மோகன் சிங்கிடம் பிரதமராக அவரை நியமனம் செய்யும் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரததீபா பாட்டீல் வழங்கினார்.
“பிரதம அமைச்சராக உங்களை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மே 22ஆம் தேதி, வெள்ளிக் கிழமையன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் உங்களுக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பேன்” என்று அந்தக் கடிதத்தில் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் கடிதத்தை செய்தியாளர்களிடம் படித்த மன்மோகன் சிங்கிடம் அமைச்சர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஐ.மு.கூட்டணிக்கு வெளியே இருந்து ஆதரவளித்துள்ள கட்சிகளில் இருந்து யாரெல்லாம் அமைச்சர்களாவார்கள் என்பதை உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என்று பதிலளித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|