|
| குடியரசு தலைவருடன் சோனியா, பிரதமர் சந்திப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 18:22 IST ) | |
மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கும், கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினார்கள்.
முன்னதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
திருணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களும், திமுகவிற்கு 18 இடங்களும் உள்ளன. காங்கிரஸ் கட்சி 216 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தவிர சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதவளித்துள்ளதால், 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 315 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
ஆட்சியமைப்பதற்கு 272 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|