|
| மும்பை தாக்குதல்: பாக்.கிடம் கூடுதல் ஆதாரங்கள்
|
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 17:52 IST ) | |
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான கூடுதல் ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா இன்று வழங்கியுள்ளது.
இந்த தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, அவரது வாக்குமூலம் உள்ளிட்டவை இந்த கூடுதல் ஆதாரங்களில் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இந்த வழக்கு தொடர்பாக எழுப்பியிருந்த 10 கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான ஆவணங்களும், 15 புத்தகங்களும் வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் மூலம் புதுடெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் அளிக்கப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.
முன்னதாக மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான மேலும் ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு கோரியிருந்தது.
அஜ்மல் கசாப்பின் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையானது கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று பாகிஸ்தானிடம் வழங்கப்படவில்லை.
மாறாக அப்போது, தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 10 பேரின் டிஎன்ஏ அறிக்கைகள் அளிக்கப்பட்டன. இவற்றில் இரண்டு அறிக்கைகள் ஒரே நபருடையது என்பது தெரிய வந்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|