|
| பஞ்சாப்: ரயில் மோதி பள்ளிக் குழந்தைகள் உட்பட 8 பேர் பலி |
| ஜலந்தர் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 17:50 IST ) | |
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் அடங்கிய கும்தாரா கிராமத்தில், ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் சென்ற வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் பள்ளிக்குழந்தைகள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.
நுர்மஹால் என்ற இடத்தில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டதாகவும், ரயில் வருவதை வேன் ஓட்டுனர் பார்க்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ரயில் மோதிய வேகத்தில் வேன் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும், இதனால், அதில் இருந்த பள்ளிக் குழந்தைகள் உட்பட உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதறியதாகவும் காவல்துறையினர் கூறினர்.
வேன் ஓட்டுனரும், 3 சிறுவர்களும் அதே இடத்தில் பலியானதாகவும், மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர்.
காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|