|
| குடியரசுத் தலைவரை சோனியா, பிரதமர் சந்திக்கிறார்கள் |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 16:55 IST ) | |
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் புதிய அரசு அமைக்க உரிமை கோருவதற்காக கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
இத்தகவலை கூட்டணிக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
சோனியா காந்தியில் வீட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக மீண்டும் சோனியா தேர்வு செய்யப்பட்டார்.
சோனியா காந்தியின் பெயரை திமுக தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான கருணாநிதி முன் மொழிந்தார். திருணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வழிமொழிந்தார். இதையடுத்து சோனியா காந்தி கூட்டணியின் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 206 இடங்களைப் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. திருணாமூல் காங்கிரஸ் 19 இடங்களையும், திமுக 18 இடங்களையும் பிடித்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடியும் தங்களின் ஆதரவை அளித்துள்ள நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 315 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
ஆட்சியமைப்பதற்கு 272 உறுப்பினர்களின் ஆதரவே போதும் என்ற நிலையில், பெரும்பான்மைக்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு உள்ளது.
இதனிடையே சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார்கள் என்று மம்தா கூறினார்.
குறைந்தபட்ச பொதுவான திட்டம் உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக குழு ஒன்றை அமைக்கவும் தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|