|
| ராஜசேகர ரெட்டி இன்று பதவியேற்பு |
| ஹைதராபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 16:13 IST ) | |
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல்வராக 2ஆவது முறையாக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி இன்று மாலை பதவியேற்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதையடுத்து, கடந்த ஞாயிறன்று புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆந்திராவில் காங்கிரஸ் அடைந்த வெற்றி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்து இந்த சந்திப்பின் போது ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, மூத்த தலைவர்கள் அகமது படேல், வீரப்ப மொய்லி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
என்றாலும் இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் ராஜசேகர ரெட்டியுடன் அமைச்சர்களும் பதவியேற்பார்களா என்று தெரியவில்லை.
ஹைதராபாத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் என்.டி. திவாரி, ராஜசேகர ரெட்டிக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
முன்னதாக புதிய அரசு அமைய ஏதுவாக தமது தலைமையிலான அமைச்சரவை ராஜினாமாவை நேற்று ஆளுநரிடம் ரெட்டி சமர்ப்பித்தா
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|