|
| ராகுல் அமைச்சராக பிரணாப் விருப்பம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 13:35 IST ) | |
மத்திய அமைச்சரவையில் ராகுல்காந்தி இடம்பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
வளரும் நாடாக உள்ள இந்தியாவைப் புரிந்து கொள்வதற்கு எங்களைப் போன்று ராகுலும் அமைச்சராக வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி புதுடெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறினார்.
ராகுலுக்கு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் விருப்பம் தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தியைப் பார்த்த நிலையில், சிலர் என்னிடம் அதுபற்றி கேட்டனர். ராகுல் அமைச்சராவதை தாம் வரவேற்பதாகவும், அது மிகவும் நல்லது என்றும் கூறியதாக பிரணாப் குறிப்பிட்டார்.
மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும், காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஒருங்கிணைத்து செயலாற்றுவதற்கும் ராகுல் அமைச்சராவது அவசியம் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|