|
| 7 அமைச்சர் பதவி திமுக கோருகிறது? |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 13:33 IST ) | |
மத்திய அமைச்சரவையில் 3 கேபினட் அமைச்சர்களையும், 4 இணையமைச்சர் பதவிகளையும் திமுக கேட்டுள்ளது.
புதுடெல்லி சென்றுள்ள முதல் அமைச்சர் கருணாநிதி, நேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்து மத்திய அமைச்சரவையில் திமுக-விற்கான இடங்கள் குறித்த பட்டியலை அளித்தார்.
கடந்த முறை திமுகவிற்கு 7 அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டது. அதேபோல இந்த முறையும் 3 கேபினட் மற்றும் 4 இணையமைச்சர்கள் பதவி வழங்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் தலைமையோ திமுகவிற்கு 2 கேபினட் அமைச்சர், 3 இணையமைச்சர் பதவிகளை தர முன் வந்ததாகவும், இதனால் திமுக தலைவர் அதிருப்தியடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து 2 கேபினட், 4 இணையமைச்சர்கள் பதவி வழங்க காங்கிரஸ் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, மத்திய அமைச்சரவையில் யார் இடம்பெறுவார்கள் என்பது இப்போது தெரியாது. கிடைத்த பிறகு நீங்கள் அறிவீர்கள் என்று கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|