யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கருணாநிதியுடன் எம்.கே. நாராயணன் சந்திப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 13:31 IST )
இலங்கையில் போர் முடிந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் நடவடிக்கைக்காக அந்நாட்டுக்குச் செல்லவிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை புதுடெல்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், புதிய அமைச்சரவையில் திமுகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை இறுதி செய்வதற்காகவும் முதல் அமைச்சர் கருணாநிதி புதுடெல்லி சென்று, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.

அவருடன், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயுடன் நடத்தவிருக்கும் பேச்சில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தாமும், சிவசங்கர் மேனனும் ஆலோசனை நடத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே. நாராயணன் தெரிவித்தார்.

இலங்கை பிரச்சினைகள் தொடர்பாக கருணாநிதியின் யோசனைகளை தாம் கேட்டதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு தாம் இன்று புறப்பட்டுச் செல்லவிருப்பதாகவும், அங்கு அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சேயுடன் பேச்சுகள் நடத்தவிருப்பதாகவும் நாரயணன் கூறினார்.

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு, போரால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை போக்கி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தும் எம்.கே. நாராயணனும், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனும் இலங்கை அதிபருடன் பேச்சு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த எம்.கே. நாராயணன், இந்தியாவிற்குக் கிடைத்த தகவலின்படி பிரபாகரன் உயிருடன் இல்லை என்று பதிலளித்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐ.மு. கூட்டணி தலைவராக சோனியா மீண்டும் தேர்வு
மத்திய அமைச்சரவை 22ல் பதவியேற்பு?
பொருளாதார சீர்திருத்தம், வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை: மன்மோகன் சிங்
அமைச்சரவை பட்டியல் : ஐமுகூ நாளை ஆலோசனை
ஜூன் 2 ல் மக்களவை கூடுகிறது
ராகுல் இலாகா இல்லாத அமைச்சர் ?
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...