யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அமைச்சரவை பட்டியல் : ஐமுகூ நாளை ஆலோசனை
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009   ( 19:07 IST )
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு த்திய அமைச்சரவையில் எத்தனை இடங்கள்? எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த இலாகாக்களை ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் புதன்கிழமையன்று அக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தேர்தலுக்கு முன் கூட்டணியில் இடம்பெற்றிருந்த அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

205 இடங்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 60 அமைச்சர்களை இடம்பெறச் செய்வது என்றும், மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு 20 அமைச்சர்கள் பதவி பிரித்து வழங்கப்படும் என்றும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இலாகாவைப் பெற்றிருந்த திமுக-வுக்கு இம்முறை அந்த இலாகா வழங்கப்படாது என்றும், ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராகவே நீடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பு வகித்த பிரணாப் முகர்ஜி, நிதித்துறை அமைச்சராக பதவியேற்பார் என்று தெரிகிறது. வெளியுறவுத் துறை அமைச்சரானால், தமது உடல் நலம் கருதி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இயலாத நிலை உள்ளதாக பிரணாப் தெரிவித்து விட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

கபில் சிபல் இம்முறை மனிதவள மேம்பாட்டுத் துறையை ஏற்கக்கூடும் என்று தெரிகிறது.

என்றாலும் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அமைச்சரவை பதவிகள் குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்திற்குப் பிறகே அமைச்சரவை பதவியேற்பு முடிவாகும் என்றார் அவர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜூன் 2 ல் மக்களவை கூடுகிறது
ராகுல் இலாகா இல்லாத அமைச்சர் ?
பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங்
அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றி
ஐ.மு. கூட்டணி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு : மாயாவதி
திரிணாமூல் காங். நாடாளுமன்ற கட்சித் தலைவராக மம்தா தேர்வு
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...