|
| ஜூன் 2 ல் மக்களவை கூடுகிறது |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 19:04 IST ) | |
புதிதாக அமையும் 15 வது மக்களவையின் முதலாவது கூட்டம் வரும் ஜூன் மாதம் 2 ம் தேதி கூடுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் எம்.பி.-க்களாக பதவியேற்றதும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுவார் என்று அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
மக்களவையில் மூத்த உறுப்பினர் ஒருவர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டு, மற்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலை இடைக்கால சபாநாயகர் நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் மாணிக்ராவ் காவித் அநேகமாக இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.இவரது நாடாளுமன்ற அனுபவம் 27 ஆண்டுகள் 8 மாதங்களாகும்.
மகாராஷ்டிர மாநிலம் நந்துபார் தொகுதியில் இருந்து மாணிக்ராவ் காவித் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உள்துறை இணையமைச்சராகப் பதவி வகித்தவர்.
இவர் தவிர பாசுதேவ் ஆச்சார்யா, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், விலாஸ் முத்தம்வர் ஆகியோரின் பெயர்களும் இடைக்கால சபாநாயகர் பதவிக்கு அடிபடுகின்றன.
வழக்கம்போல 15 வது மக்களவையின் முதல் கூட்டமும் குறுகிய கால கூட்டமாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|