|
| ராகுல் இலாகா இல்லாத அமைச்சர் ? |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 17:02 IST ) | |
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் தாம் இடம்பெறுவது குறித்து விரைவில் தெரிய வரும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுலிடம் அமைச்சர் பதவி ஏற்பீர்களா? அல்லது கட்சிப் பணியாற்றுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, விரைவில் தெரியும் என்று பதிலளித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விடவும் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், ராகுல் காந்தியின் தீவிர பிரசாரம் காங்கிரசின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக, நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.ராகுலை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கட்சியின் பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இலாகா இல்லாத அமைச்சராக ராகுல் நியமிக்கப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்ஸி தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|