|
| பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங் |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 13:28 IST ) | |
மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக பதவியேற்க ஏதுவாக காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லியில் இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், மன்மோகன் சிங்கின் பெயரை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன் மொழிந்தார்.
சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.அவரது பெயரை கர்நாடக மாநில மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார்.
மேலும் கட்சியின் மாநிலங்களவைத் தலைவராகவும் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்தது.
புதிய அரசை அமைக்கும் முயற்சியாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராகவும், பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் மன்மோகன் சிங் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மரபுரீதியாக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோருவார்கள்.அதன் பின் பிரதமராக மன்மோகன் சிங்கை நியமித்து, ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுவார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|