|
| அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றி |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 13:24 IST ) | |
அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று குறிப்பிட்ட இலக்கினை தாக்கவல்ல அக்னி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒரிஸ்ஸா கடல்பகுதியில் இருந்து, சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணையின் தாக்குதல் இலக்கிற்கான தொலைவு 3 ஆயிரம் கி.மீ. என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணையானது, ஒரிஸ்ஸா மாநிலம் பாலசூரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தம்ரா என்னுமிடத்தில் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இலக்கை நோக்கி செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழக அதிகாரிகள், விஞ்ஞானிகள் இந்த சோதனையின் போது இருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும், ஏற்கனவே 3 முறை அக்னி -2 ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளதன் மூலம் பாதுகாப்புப் படையின் சேர்ப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் மூத்த விஞ்ஞானி கூறினார்.
தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கினை சுமார் 1,500 கி.மீ. தொலைவுக்கு சென்று அக்னி - 1 ஏவுகணை தாக்கக்கூடியது. அக்னி-2 ஏவுகணையைப் பொருத்தவரை சுமார் 2,500 முதல் 3000 கி.மீ தொலைவு வரையிலான இலக்கினை தாக்குவதோடு, ஆயிரம் கிலோ எடை வரை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|