|
| ஐ.மு. கூட்டணி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு : மாயாவதி |
| லக்னோ (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 13:23 IST ) | |
மக்களவைத் தேர்தலை 3வது அணியின் கூட்டணியில் சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மத்தியில் புதிதாக அமைய உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்த மாயாவதி, பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் வாழ்த்துத் தெரிவித்தாக குறிப்பிட்டார்.
இதையடுத்து கடந்த 17 ம் தேதி தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், மதச்சார்பற்ற சக்திகளை பலப்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாக மாயாவதி கூறினார்.
இந்நிலையில், இன்று காலை நடந்த கட்சியின் தேசிய நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாகவும், கூட்டத்தின் முடிவில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் மாயாவதி தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|