|
| திரிணாமூல் காங். நாடாளுமன்ற கட்சித் தலைவராக மம்தா தேர்வு |
| கொல்கத்தா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 12:38 IST ) | |
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மம்தா பானர்ஜி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சரவையில் திருணாமூல் காங்கிரஸ் கட்சி இடம்பெறுவதற்கு எந்த நிபந்தனையும் விதிக்காது என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மம்தா கூறினார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் முகுல் ராய், காங்கிரஸ் தலைமையில் அமையும் புதிய அரசுக்கான ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் டெல்லியில் அளிப்பார் என்றும் மம்தா கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|