|
| இலங்கையில் அதிகாரப்பகிர்வுக்கு நடவடிக்கை : இந்தியா |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 12:34 IST ) | |
இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு வாழும் தமிழர்கள் உள்பட அனைத்து பிரிவு மக்களுக்கும் சம உரிமை கிடைப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ், இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய இருப்பிடம் மற்றும் மறுநிவாரணம் அளிக்க வேண்டிய தருணம் இது என்று கூறினார்.
இலங்கையில் வாழும் மக்களுக்கு அந்நாட்டு அரசியல் சட்டத்திற்குட்பட்டு, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு முன்வர வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சொந்த நாட்டில் மரியாதையுடன் நடத்தப்படுவதாக உணர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் அரசுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் அளிக்க இந்தியா செயலாற்றும் என்று உறுதியளித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர், மருத்துவ உதவியாக மேலும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளுடன் இந்திய விமானம் வரும் வெள்ளிக்கிழமையன்று இலங்கை புறப்பட்டுச் செல்லும் என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|