யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு
புதுடெல்லி ( ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009   ( 17:14 IST )
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை கொடுப்பதற்காக,ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை தேர்தல் ஆணையர்கள் இன்று சந்திக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கூடுதல் இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிப்பட்ட இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

அதன்படி, நவீன்சாவ்லா தலைமையில் குரேஷி மற்றும் சம்பத் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையர்கள் குழு, இன்று மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து, புதிய மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை கொடுக்கிறது.

புதிய நாடாளுமன்றம் அமைந்ததும், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார்.அதற்கு முன்னதாக, புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பதற்காக குடியரசுத் தலைவரே தற்காலிக சபாநாயகராகவும், அவையின் மூத்த உறுப்பினராகவும் இருப்பார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தே.ஜ.கூட்டணி கூட்டம் திடீர் ரத்து !
'பேஷன் ஷோ' நிகழ்ச்சியில் ஆபாசம் : நடிகர் அக்சய் குமார் கைது
எதிர்க்கட்சித் தலைவராக அத்வானி நீடிப்பார் : பா.ஜனதா
குஜராத்தில் சாலை விபத்து : 21 பேர் பலி
தேர்தல் தோல்வி : மார்க்சிஸ்ட் ஆலோசனை
அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது : மோடி
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...