|
| தே.ஜ.கூட்டணி கூட்டம் திடீர் ரத்து ! |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 17:13 IST ) | |
தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று மாலை கூடவிருந்த பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக, பா.ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டம் அத்வானி தலைமையில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது.
இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, ஐ.என்.எல்.டி., ஆர்.எல்.டி., அகாலி தளம், ஏ.ஜி.பி., மற்றும் டி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பல தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|