|
| 'பேஷன் ஷோ' நிகழ்ச்சியில் ஆபாசம் : நடிகர் அக்சய் குமார் கைது |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 17:10 IST ) | |
மும்பையில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஆபாசமாக நடந்துக்கொண்ட குற்றத்திற்காக பிரபல இந்தி நடிகர் அக்சய்குமார் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் கடந்த மார்ச் மாதம் ஆடை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு மேடையில் வலம் வந்த இந்தி நடிகர் அக்சய் குமார், திடீரென பார்வையாளர்களின் முன்வரிசையில் அமர்ந்திருந்த தனது மனைவி அருகே வந்தார்.
அப்போது, அக்சய் குமாரின் பேண்ட் பட்டன்களை, அவரது மனைவி டுவிங்கிள் கழற்றினார்.இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பொது நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்துக் கொண்டதாக கூறி அக்சய்குமார் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், சினிமா படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த அக்சய் குமார், இன்று மும்பை திரும்பினார்.அவர் தனது வழக்கறிஞருடன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.அக்சய் குமாரையும், அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|