யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தேர்தல் தோல்வி : மார்க்சிஸ்ட் ஆலோசனை
புதுடெல்லி ( ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009   ( 15:29 IST )
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூடி ஆலோசனை நடத்தியது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் படுதோல்வி அடைந்தன. தோல்விக்கான காரணங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது.

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பதவி விலகப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொலிட்பீரோ உறுப்பினர் பீமன் போஸ் கலந்து கொள்ளவில்லை.தேர்தலுக்கு பிந்தைய விதிமுறைகள் காரணமாக, இக்கூட்டத்தில் பட்டாச்சார்யா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, நிருபம் சென், பினாராய் விஜயன், எம்.கே.பாந்தே, எஸ்.ஆர்.பிள்ளை மற்றும் கேரள முதல்வர் அச்சுதானந்தன், திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது : மோடி
ஜனாதிபதியிடம் மன்மோகன் ராஜினாமாக கடிதம்
ஆந்திரா, ஒரிசா, சிக்கிமில் அதே ஆட்சி
லாலுவுக்கு சோனியா அழைப்பு
இடதுசாரி தலைவர்கள் ஆலோசனை
எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்?
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...