யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜனாதிபதியிடம் மன்மோகன் ராஜினாமா கடிதம்
புதுடெல்லி (ஏஜென்சி), 18 மே 2009   ( 15:24 IST )
மத்தியில் புதிய அரசு அமைய ஏதுவாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று னாதிபதி பிரதிபா பாட்டீலை நேரில் சந்தித்து தமது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை மரபுப்படி அளித்தார்.

அதே சமயம் புதிய அரசு அமையும்வரை மன்மோகனே இடைக்கால பிரதமராக நீடிப்பார்.இந்நிலையில், மத்தியில் அடுத்த ஆட்சியை அமைக்க வருமாறு மன்மோகன் சிங்கிற்கு பிரதிபா பாட்டீல் நாளை முறைப்படி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான புதிய அரசு வரும் 21 ம் தேதி பதவியேற்கும் என்று தெரிகிறது.

முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் கடைசிக் கூட்டத்தில், தற்போதையை 14 வது நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் ஒப்படைத்தனர்.அதோடு, தற்போதைய நாடாளுமன்றத்தை கலைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குஜராத்தில் சாலை விபத்து : 21 பேர் பலி
தேர்தல் தோல்வி : மார்க்சிஸ்ட் ஆலோசனை
அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது : மோடி
ஆந்திரா, ஒரிசா, சிக்கிமில் அதே ஆட்சி
லாலுவுக்கு சோனியா அழைப்பு
இடதுசாரி தலைவர்கள் ஆலோசனை
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...