யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஆந்திரா, ஒரிசா, சிக்கிமில் அதே ஆட்சி
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009   ( 16:31 IST )
ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.

294 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 157 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது.

தெலுங்கு தேசம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 103 இடங்களை மட்டுமே பிடித்துள்ளன. சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சி 18 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபை மட்டுமல்லாது, மக்களவையிலும் அதிக இடங்கள் கிடைத்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி கடந்த தேர்தலை விடவும் இந்த தேர்தலில் அதிக சட்டசபைத் தொகுதிகளில் வென்றுள்ளது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு 10 சட்டசபைத் தொகுதிகள் கிடைத்துள்ளன.

ஒரிசா மாநிலத்தில் ஆளும நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் தனிப்பெரும்பான்மைக்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

சிக்கிம் மாநிலத்தில் ஆளும சிக்கிம் ஜனநாயக முன்னணி அனைத்து 32 தொகுதிகளிலும் வென்று எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
லாலுவுக்கு சோனியா அழைப்பு
இடதுசாரி தலைவர்கள் ஆலோசனை
எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்?
புதிய அரசு அமைப்பது குறித்து காங். ஆலோசனை
தோல்வி அடைந்த மத்திய அமைச்சர்கள்!
முக்கியத் தலைவர்களின் வெற்றி-தோல்வி விபரம்!
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...