யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரதமர் பதவிக்கு மன்மோகன்சிங்கே தகுதியானவர்: ராகுல்
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2009   ( 17:11 IST )
பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் மட்டுமே தகுதியானவர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் காந்தியின் மகனுமான ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, "காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு மன்மோகன்சிங் தான் பொருத்தமானவர். தகுதியானவர். அவரை தவிர வேறு யாரும் பொருத்தமானவர்களாக இருக்கமுடியாது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியில் ஒருமித்த கருத்து நிலவி வருகிறது" என்றார்.

பிரதமர் பதவிக்கு ராகுல் வரவேண்டும் என்று கட்சியினர் ஒருசாராரிடம் கருத்து நிலவியது. இதைதொடர்ந்து, 'பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தி சரியானவர் என்றும், இளைய தலைமுறையிடம் பிரதமர் பதவி அளித்தால் நாடு முன்னேறும்' என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் பதவியை ஏற்கும் அளவுக்கு தனக்கு அனுபவம் போதாது என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்தான் தகுதியானவர் என்றும் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராக்கிங்: மாநில ஆளுனர்களுக்கு குடியரசுத் தலைவர் கடிதம்!
பாபர் மசூதி இடிப்பு: பா.ஜனதா மீது கல்யாண்சிங் குற்றச்சாட்டு
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்? சுகாதாரத்துறை விளக்கம்
ஒரே குடும்பத்தில் 5 பேர் கொலை: 6 பேருக்கு தூக்கு உறுதி
உ.பி.யில் 46% வாக்குப்பதிவு: கட்சிகள் கவலை
வட மாநிலங்களில் கடும் வெயில்: 12 பேர் பலி
செய்திகள்
தேசியம் - வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
கார்த்திக் அனிதா
டாம் அண்ட் ஜெர்‌ரி பார்த்திருக்கிறீர்களா? என்னதான் அடித்துக் கொண்டாலும் பரஸ்பரம் ஒரு அன்பு இருக்கும். கார்த்திக் அனிதா அந்த வகை. கார்த்திக்கும் அனிதாவும் எதிரெதிர் வீடு. சின்ன வயது முதல் ப்ரெண்ட்ஸ். எப்படி? தன்னை கலாய்ப்பவர்களை...
பட்டாளம் - விமர்சனம்
அயன் - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா?சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறதா?...
மேலும் படிக்க|மேலும்...