|
| வட்டிவிகிதம் மேலும் குறைய வாய்ப்பு : மான்டெக் சிங் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009 ( 15:19 IST ) | |
வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
கடந்த ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி அரசு அறிவித்த ஏற்றுமதி - இறக்கமதி சலுகைகள், உற்பத்தித் தீர்வை குறைப்பு, வரி விலக்கு ஆகியனவும், பணப் புழக்கத்தைக் கூட்ட மைய வங்கி எடுத்த நடவடிக்கைகளும் எந்த அளவிற்கு பலனைத் தந்துள்ளன என்பது ஏப்ரல், மே மாதங்களில் தெரியவரும்.
அதன் முழுமையான பலன்கள் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் முழுமையாகத் தெரியும்.
பல்வேறுபட்ட தொழிலங்களில் இருந்து கிடைக்கும் விவரங்கள் நமது நாட்டின் பொருளாதாரம் சுணக்க நிலையில் இருந்து விடுபட்ட மேம்பட்டு வருவதைத் தெரிவிக்கிறது.
இரண்டாவது காலாண்டில் அது மிகத் தெளிவாக தெரிந்துவிடும்.இந்த நிதியாண்டில் நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (பொருளாதார) வளர்ச்சி 6 விழுக்காடாக இருக்கும்.
வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் குறைக்குமா என்று கேடக்ப்படுகிறது.அதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அலுவாலியா கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மே 6 ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்... |
| |
|
|
|
|
| கார்த்திக் அனிதா | | டாம் அண்ட் ஜெர்ரி பார்த்திருக்கிறீர்களா? என்னதான் அடித்துக் கொண்டாலும் பரஸ்பரம் ஒரு அன்பு இருக்கும். கார்த்திக் அனிதா அந்த வகை.
கார்த்திக்கும் அனிதாவும் எதிரெதிர் வீடு. சின்ன வயது முதல் ப்ரெண்ட்ஸ். எப்படி? தன்னை கலாய்ப்பவர்களை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா?சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறதா?... |
| |
|
|
|
|
|
|