யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நீதிமன்ற மோதல் : உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
புதுடெல்லி (ஏஜென்சி ), வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2009   ( 18:06 IST )
வழக்கறிஞர்கள், போலீசார் மோதல் தொடர்பாக மேற்கொண்டு விசாரிக்கப்போவதில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அதனை சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 19 ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்குமிடையே நிகழ்ந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இதையடுத்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சென்னை வந்து விசாரணை நடத்தினார்.அந்த அறிக்கையை நேற்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை அவருடைய இல்லத்தில் சந்தித்து தாக்கல் செய்தார்.

இந்நநிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது,விசாரணை அறிக்கையில் வழக்கறிஞர்கள் மீது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கடுமையான குற்றச்சாற்றுகளை கூறியுள்ள விவரம் தெரிய வந்தது.

வழக்கறிஞர்கள் குண்டர்களைப் போல் செயல்பட்டார்கள் என அந்த அறிக்கையில் கடுமையாக சாடியுள்ள கிருஷ்ணா, வன்முறைக்கு காரணம் வழக்கறிஞர்களின் மோசமான செயல்கள்தான் என்றும், அவர்கள் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக நினைத்துக் கொண்டதாகவும் குற்றம் சாற்றியுள்ளார்.

அத்துடன் நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களின் நடத்தையை கண்டிக்காமல் அவர்கள் மீது தலைமை நீதிபதி பொறுப்பு வகித்த முகோபாத்தியாயா உள்ளிட்ட நீதிபதிகளின் மென்மையான அணுகுமுறையும், மெத்தனப்போக்குமே மோதல் சம்பவத்திற்கு காரணமாக அமைந்துவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய வன்முறைக்கு காவல் துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகிய இரு தரப்பினருமே காரணம் என்று கூறியுள்ள கிருஷ்ணா, அதே சமயம் காவல் துறையினர், மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கட்டுப்படுத்த தனது அதிகார வரம்பை மீறி நீதிமன்றத்திற்குள் புகுந்து, வழக்கறிஞர்கள் மீது அதிகபட்ச பலப்பிரயோகத்தை பயன்படுத்தி தடியடி நடத்தியதாகவும் குற்றம் சாற்றியுள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி, வழக்கறிஞர்களுள் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நன்னடத்தை நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்றும், பார் கவுன்சில் இது விஷயத்தில் திறம்பட செயல்படாமல் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து இவ்வழக்கை மேற்கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரிக்காது என அறிவித்த நீதிபதிகள், ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கையின் அடிப்ப்டையில் சென்னை உயர் நீதிமன்றமே மேற்கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறினர்.

நீதிமன்ற வன்முறை சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்துவது குறித்த பிரச்சனையிலும் உயர் நீதிமன்றமே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நீதிமன்ற மோதல் : வ்ழக்கறிஞர்கள் மீது விசாரணைக் கமிஷன் கடும் சாடல்
நாகர்கோவிலில் அத்வானி நாளை பிரசாரம்
இந்தியா வருகிறார் பாக். முன்னாள் அதிபர் முஷாரப்
‌3 ஜி ‌சேவை விவகார‌‌த்தை கவ‌னி‌க்க அமை‌ச்ச‌ர் குழு
5 உ‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ங்களு‌க்கு தலைமை ‌நீ‌திப‌திக‌ள் ‌நியம‌ன‌ம்
கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் 2 ஹ‌ி‌ஸ்பு‌ல் ‌தீ‌விரவா‌திக‌‌ள் கைது
செய்திகள்
சர்வதேசம் - சூடானின் டர்ஃபர் நகரில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை அதிபர் ஓமர் அல்-பஷீர் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதற்கு உரிய ஆதாரம் உள்ளதால், இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிவா மனசுல சக்தி - விமர்சனம்
சிவா மனசுல சக்தி - சுருக்கமாக எஸ்எம்எஸ். படத்தின் முதல் காட்சி. ஓடிவந்து புகைவண்டியில் ஏறுகிறான் நாயகன். எதிரே நாயகி. கையில் ஆனந்த விகடன். டொட்டடாய்ங்... தயா‌ரிப்பு விகடன் டாக்கீஸ். நாயகன் பெயர் சிவா. நாயகி பெயர் சக்தி. மீதமிருப்பது மனசுல...
வெண்ணிலா கபடி குழு- விமர்சனம்
'நான் கடவுள்' - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக குழந்தை பிறந்து 2 முதல் 4 மாதங்கள் வரை கண்களின் நிறத்தை உறுதியாகக் கூற முடியாது...
மேலும் படிக்க|மேலும்...