யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 17 பாகிஸ்தானியர் கைது
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 ஜனவரி 2009   ( 15:29 IST )
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 17 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வந்த 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்திய கடல் பகுதிகளில் கடலோர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக குஜராத் கடற்பகுதிக்குள் 2 படகுகள் நுழைந்தன. அவற்றை கடலோர பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, படகில் வந்த 17 பாகிஸ்தானியர்களையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

பாகிஸ்தானியர்கள், இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவியதற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராமலிங்க ராஜு ஜாமீன் மனு இன்று விசாரணை
பிப். 12ல் நாடாளுமன்றக் கூட்டம்
இலங்கை சென்றார் மேனன்: இன்று பேச்சு வார்த்தை
சத்யம் நிறுவனத்திற்கு நிதியுதவி இல்லை: மத்திய அரசு
தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் நியமனம்
எதையும் சமாளிக்க ராணுவம் தயார்: தீபக் கபூர்
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...