|
| லாரி ஸ்டிரைக் வாபஸ்: இயல்பு நிலை திரும்புகிறது! |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 13 ஜனவரி 2009 ( 08:49 IST ) | |
கடந்த 8 தினங்களாக நீடித்து வந்த லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இயல்பு நிலை படிப்படியாக திரும்புகிறது.
டீசல் விலை குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 5ம் தேதி முதல் போராட்டத்தில் குதித்தனர். இவர்களுக்கு ஆதரவாக டேங்கர் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் குதித்ததால், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
காய்கறி விலைகள் பல மடங்கு உயர்ந்தன. அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையி,ல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் அரசு பிரதிகளுக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், கைது செய்யப்பட்டுள்ள தங்களது சங்கத்தின் பிரதிநிதிகளை உடனடியாக விடுதலை செய்யும்படி, அகில இந்திய மோட்டார் வாகனப் போக்குவரத்து காங்கிரஸ் சங்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதை அரசுப் பிரதிநிதிகள் ஏற்றுகொண்டதைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனால், தமிழகத்தின் சேலம், ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் தேங்கிக்கிடக்கும் சரக்குகள் அடுத்த சில தினங்களில் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காய்கறிகள் விலையும் விரைவில் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|