|
| இடைதேர்தல் தோல்வி: சிபுசோரன் ராஜினாமா |
| ராஞ்சி (ஏஜென்சி),, திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 14:22 IST ) | |
இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக, ஜார்கண்ட் மாநில முதல்வர் சிபுசோரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தமார் தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் முதல்வர் சிபுசோரன் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி சிபுசோரன் பதவி விலக வேண்டும் என்று, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இதையேற்று, சிபுசோரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வராக இருந்த ஸ்டீபன் மராண்டியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இருவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை மாநில ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மாநிலத்தின் புதிய முதல்வராக தனது கட்சியை சேர்ந்த சாம்பாய் சோரனை நியமிக்கும்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைமைக்கு சிபுசோரன் பரிந்துரை செய்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியுடனான தங்களது கூட்டணி தொடரும் என்றும் சிபுசோரன் உறுதியளித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|