|
| பிரதமருடன் கர்சாய் இன்று ஆலோசனை |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 12:20 IST ) | |
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். தனது பயணத்தின் 2ஆவது நாளான இன்று, பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்திக்கிறார்.
இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, இரு தரப்பு உறவுகள், ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்தியர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.
இந்த சந்திப்பின்போது, மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உள்ள ஆதாரங்களை ஆப்கானிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்து கொள்கிறது.
கர்சாயுடன் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ரன்கீன் தத்பார் ஸ்பன்டா, தேசிய பாதுகாப்புச் ஆலோசகர் ஜல்மி ரசூல் ஆகியோரும் டெல்லி வந்துள்ளனர்.வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, அவர்கள் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
இது தவிர சோனியா உள்ளிட்ட இந்தியத் தலைவர்களையும் கர்சாய் மற்றும் அவரது குழுவினர் சந்தித்துப் பேசுவார்கள் என்று தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|