|
| ஏ.ஆர். ரஹ்மானுக்கு 'கோல்டன் குளோப்' விருது |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 12:14 IST ) | |
ஹாலிவுட் உலகில் மிக உயரியதாகக் கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.இவ்விருதை பெரும் முதலாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இங்கிலாந்து இயக்குனர் டேனி பாயல் இயக்கிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற படம், மும்பை நகரைச் சேர்ந்த ஏழைச் சிறுவன், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பணக்காரனாவதை சித்தரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படமாகும்.
இப்படத்தில் அனில் கபூர், இர்பான் கான் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் குல்சார் எழுதிய 'ஜெய் ஹோ' என்ற பாடலுக்காக, ஏர்.ஆர். ரஹ்மானுக்கு 'கோல்டன் குளோப்' விருது கிடைத்துள்ளது.
இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் ரஹ்மான் பெற்றுள்ளார். 'கோல்டன் குளோப்' விருது வென்றுள்ள ரஹ்மானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|