|
| லாரி ஸ்டிரைக்: 8ஆவது நாளாக நீடிப்பு |
| புதுடெல்லி / சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 11:26 IST ) | |
லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால், இன்று 8வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நீடிக்கிறது.
டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதனால் பல மாநிலங்களிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து சங்க தலைவர்வர்கள் பலர் எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிப்பது ஆகியவை குறித்து ஆலோசிப்பதற்காக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, சென்னை சால்ட் குவாட்டர்ஸ் பகுதியில் இருந்து இயக்கப்படும் ரயில்வே குட்ஷெட் லாரிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இதன் காரணமாக, ரயில் மூலமாக கொண்டுவரப்படும் அரிசி, நெல், கோதுமை, சிமெண்ட் ஆகியவை தேங்கிக்கிடக்கிறது.
இந்நிலையில், 8வது நாளாக இன்றும் லாரிகல் வேலை நிறுத்தம் நீடிக்கிறது. எனினும், மத்திய அரசின் எச்சரிக்கை காரணமாக, குடிநீர், பால் லாரி போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|