|
| பங்காளதேஷ் பிரஜைகளுக்கு சிதம்பரம் எச்சரிக்கை |
| புதுடெல்லி(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2009 ( 16:22 IST ) | |
பங்காளதேஷிலிருந்து சட்ட விரோதமாக வந்த தங்கியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது :
விசாக்காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக பங்காளதேஷ் பிரஜைகள் இந்தியாவில் தங்க என்ன அவசியம் உள்ளது ? அதிக எண்ணிக்கையில் பங்களாதேஷிகளுக்கு விசா அளிக்கப்படுகிறது ஏன் ? இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவுக்கு வந்த பங்காளதேஷ் பிரஜைகள், விசா காலம் முடிந்த பிறகு தாயகத்திற்கு திரும்புகிறார்களா என்பது கண்காணிக்கப்படாமல் உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமாக இந்தியாவுக்கு வந்து தங்கியிருக்கும் பங்காளதேஷ் பிரஜைகளால் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பங்காளதேஷ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வருபவர்கள் இஸ்லாமியரா அல்லது வேறு ஏதாவது மதத்தைச் சேர்ந்தவரா என்பது அல்ல பிரச்சனை.அவர்கள் பங்காளதேஷிகள் அவ்வளவுதான்.அவர்களது மதம் முற்றிலும் இந்தியாவுக்கு சம்பந்தமில்லாதது.
நமது எல்லைகள், பாஸ்போர்ட் மையங்கள் போன்றவற்றில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது.நாம் ஒவ்வொரு மாதமும் ஏராளமான விசாக்களை பங்காளதேஷ் பிரஜைகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்.அவ்வளவு விசாக்களை கொடுப்பதற்கு காரணமே இல்லை.
அவ்வாறு விசா வழங்கப்பட்ட ஒருவர் தனது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றாரா இல்லையா என்பதை கண்காணிக்கப்படுவதில்லை.
இங்கு வேலை செய்ய வேண்டுமென்றால் ஒர்க் பெர்மிட் வைத்திருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் அவர்கள் இங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியம் என்ன ?
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|