யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சத்யம் : 3 புதிய இயக்குனர்கள் குழு அறிவிப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2009   ( 15:31 IST )
மோசடிக் குற்றச்சாற்றுக்குள்ளான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கிப்போகாமல் தடுக்கும் நோக்கத்துடன் அதற்கு 3 இயக்குனர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

தீபக் பரேக், கிரண் கார்னிக், சி. அச்சுதன் ஆகியோர் புதிய இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இந்த இயக்குனர்கள் குழு இன்னும் 24 மணி நேரத்தில் கூடி இதர இயக்குனர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் குறித்து முடிவு செய்யும் என்று மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் பி.சி. குப்தா புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக குற்றம்சாற்றப்பட்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சத்யம் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடக்கூடாது என்பதற்காகவும், மோசடி குறித்த முழு விவரங்களை திரட்டும் நோக்கத்திலும் மத்திய அரசு இந்த் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
லாரி ஸ்டிரைக் 7 ஆவது நாளாக நீடிக்கிறது
லாரி ஸ்டிரைக்: பேச்சு வார்த்தைக்கு பாலு அழைப்பு
இஸ்ரேலைப் போல் பாக்.கை இந்தியா தாக்காது
ஓரிரு நாளில் ராஜினாமா செய்வேன்: சிபுசோரன்
பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 விலை குறைகிறது
சத்யம் விவகாரம் : பிரதமருடன் சிதம்பரம் ஆலோசனை
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...