|
| லாரி ஸ்டிரைக் 7 ஆவது நாளாக நீடிக்கிறது |
| புதுடெல்லி (ஏஜென்சி), 11 ஜனவரி 2009 ( 13:12 IST ) | |
டீஸல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ( ஏஐஎம்டிசி ) அமைப்பு நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 7 ஆவது நாளாக நீடிக்கிறது.
பேச்சு வார்த்தைக்கு வருமாறு லாரி உரிமையாளர்களுக்கு மத்திய தரை வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்று அழைப்பு விடுத்தும் அதனை அவர்கள் நிராகரித்து விட்டனர்.
பிரச்சனைக்கு அரசு ஒரு தீர்வை அளிக்காதவரை நாங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட மாட்டோம் என ஏஐஎம்டிசி துணை தலைவர் அமோலா சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் எஸ்மா மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் சங்க நிர்வாகிகளை விடுதலை செய்யும் வரை அரசுடன் பேச்சு வார்த்தை என்பதே கிடையாது என்று ஏஐஎம்டிசி தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏஐஎம்டிசி தலைவர் சரண் சிங் மற்றும் செயலாளர் எஸ். வேணுகோபால் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமையன்று எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏஐஎம்டிசியின் போட்டி சங்கமான அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு ஆதரவாக தங்களது லாரிகளை இயக்க சம்மதம் தெரிவித்து இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில், லாரி ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஆங்காங்கே உற்பத்தி இடங்களிலேயே தேங்கி கிடக்கின்றன.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீத்ம் வரை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|