|
| லாரி ஸ்டிரைக்: பேச்சு வார்த்தைக்கு பாலு அழைப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 ஜனவரி 2009 ( 17:40 IST ) | |
வேலை நிறுத்தத்தை உடனடியாகக் கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரும்படி லாரி உரிமையாளர்களுக்கு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் இன்று 6-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததுடன், பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய கடல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் டி.ஆர். பாலு டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
வேலை நிறுத்தம் செய்தவர்கள் மீது பெட்ரோலியத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தைப் போல், லாரி உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பாலு, லாரி உரிமையாளர்களுக்கு எதிராக எவ்வித கடும் நடவடிக்கைகளையும் எடுத்து, இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்க தனது அமைச்சகம் விரும்பவில்லை என்றார்.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பேச்சு வார்த்தைக்கு லாரி உரிமையாளர்கள் முன் வர வேண்டும் என்றார் பாலு.
லாரி உரிமையாளர்கள் கைது குறித்து அவர் கூறுகையில், ஒரு சிலர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சங்க உறுப்பினர்களோ, பிரதிநிதிகளோ மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்றார்.
முன்னதாக நேற்று பேட்டியளித்த பாலு, வேலை நிறுத்தத்தை தொடர்வதன் மூலம், மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க லாரி உரிமையாளர்கள் வழி வகுத்துவிடக் கூடாது என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது அணுகுமுறையில் மென்மையான போக்கை அவர் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|