யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இஸ்ரேலைப் போல் பாக்.கை இந்தியா தாக்காது
புதுடெல்லி (ஏஜென்சி), 10 ஜனவரி 2009   ( 16:03 IST )
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்காகாஸா மீது ஸ்ரேல் தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கையை பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொள்ளாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், மும்பை தாக்குதலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலும் ஒன்றாகாது என்றார்.

அதே சமயம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக தான் அளித்த வாக்குறுதியை பாகிஸ்தான் எந்த அளவிற்கு நிறைவேற்றுவது என்பதை பொறுத்துதான் இந்தியாவின் எதிர்கால நடவடிக்கை இருக்கும்.

காஸாவில் உள்ள ஹமாஸ் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் போன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்ற கேள்விக்கு பிரணாப் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இதில் ( இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்துவது ) எனக்கு உடன்பாடில்லை.ஏனெனில் இது முற்றிலும் தவறானது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்ததை போன்று பாகிஸ்தானுக்கு சொந்தமான நிலம் எதையும் நாம் ஆக்கிரமிக்கப்போவதில்லை.எனவே அதுபோன்றதொரு சூழ்நிலையை எவ்வாறு ஒப்பிடலாம் ?

அனைத்து வாய்ப்புகளையுமே இந்தியா திறந்தே வைத்துள்ள போதிலும், மும்பை தாக்குதல் தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்கள் தமது நாட்டிலுள்ள சக்திகளுடன் தொடர்புள்ளதாக இருப்பதை உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கேட்ட ஆதாரங்களை இந்தியா அளித்துவிட்டது.அதன் அடிப்படையில் பாகிஸ்தான் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பேட்டியில் பிரணாப் மேலும் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஓரிரு நாளில் ராஜினாமா செய்வேன்: சிபுசோரன்
பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 விலை குறைகிறது
சத்யம் விவகாரம் : பிரதமருடன் சிதம்பரம் ஆலோசனை
டெல்லி விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு
சத்யம் வங்கி கணக்கு ஆவணங்களை காணவில்லை
ரூ. 7000 கோடி மோசடி : சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு கைது
செய்திகள்
தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...