|
| டெல்லி விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு |
| புதுடெல்லி (ஏஜென்சி), 10 ஜனவரி 2009 ( 13:01 IST ) | |
டெல்லி விமான நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இளைஞர்களை பிடிப்பதற்காக, பாதுகாப்புப் படையினர் துப்பாகிச்சூடு நடத்தினர்.
தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே இன்று அதிகாலை 1.10 மணியளவில், காரில் வந்த இரண்டு இளைஞர்கள் அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இளைஞர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு படையினர், இருவரையும் அழைத்தனர். ஆனால் இளைஞர்கள் இருவரும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து காரின் டயரை துப்பாக்கியால் சுட்டு, வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தினர்.
பின்னர் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு நடந்த விசாரணையில் அவர்கள் பெயர் ஹேமந்த், சச்சின் மாலிக் என்று தெரிய வந்தது.
ஏதேனும் சதித் திட்டம் தீட்டும் நோக்கத்துடன் விமான நிலையம் அருகே வந்தனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் இருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|