|
| சத்யம் வங்கி கணக்கு ஆவணங்களை காணவில்லை |
| ஐதராபாத்(ஏஜென்சி), சனிக்கிழமை, 10 ஜனவரி 2009 ( 11:33 IST ) | |
மோசடி குற்றச்சாற்றுக்குள்ளான சத்யம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு முறைகேடுகள் மற்றும் சுமார் 7,000 கோடி நிதி மோசடியைத் தொடர்ந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ராமலிங்க ராஜூ கடந்த புதனன்று பதவி விலகினார்.மேலும் நிதி மோசடியையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதனால் சத்யம் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்துள்ளது.அத்துடன் தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டியிலிருந்து சத்யம் நீக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஆந்திர மாநில போலீஸ் டிஜிபி யாதவ் அலுவலகத்திற்கு வந்த ராமலிங்க ராஜுவும், அவரது தம்பியும்,கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ராஜு முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அவர் மீது சிபிசிஐடி போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்திருந்த போதிலும்,பின்னர் சத்யம் முதலீட்டாளர் ஒருவரது புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜுவைக் கைது செய்தனர்.
இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 409 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 468 மற்றும் 471 (ஏமாற்று), 120 பி (கிரிமினல் சதி), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ராஜு மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், சத்யம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பதிவு அலுவலகம் உள்பட முக்கிய அலுவலகங்களில், நிறுவன பதிவாளர் அலுவலக அதிகாரிகள் நடத்திய ரெய்டில், வங்கிக் கணக்கு விவரங்கள் மட்டும் ஆவணங்கள் மட்டும் கிடைக்கவில்லை.
இதனால் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடு ரூ.7,000 ஆயிரம் கோடி மட்டுமா அல்லது அதைவிட அதிகமா என்ற சந்தேகம் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நிறுவன பதிவாளர் அலுவலக அதிகாரிகள், சிபிஐ, செபியின் தீவிர குற்றவியல் புலனாய்வு பிரிவு, ரிசர்வ் வங்கி, உள்ளூர் போலீஸ் என அனைத்துத் தரப்பும் இணைந்த கூட்டு புலனாய்வு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்யம் நிதித் துறைத் தலைவர் சீனிவாஸ் வாட்லாமணியைக் கைது செய்த பிறகே இதில் உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|