யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ரூ. 7000 கோடி மோசடி : சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு கைது
ஐதராபாத்(ஏஜென்சி), 10 ஜனவரி 2009   ( 10:39 IST )
7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக குற்றச்சாற்றை ஒப்புக்கொண்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவும் அவரது தம்பி ராம ராஜும் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு முறைகேடுகள் மற்றும் சுமார் 7,000 கோடி நிதி மோசடியைத் தொடர்ந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ராமலிங்க ராஜூ கடந்த புதனன்று பதவி விலகினார்.மேலும் நிதி மோசடியையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதனால் சத்யம் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்துள்ளது.அத்துடன் தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டியிலிருந்து சத்யம் நீக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு ஆந்திர மாநில போலீஸ் டிஜிபி யாதவ் அலுவலகத்திற்கு வந்த ராமலிங்க ராஜுவும், அவரது தம்பியும், சத்யம் நிர்வாக இயக்குநருமான ராமராஜூவுடன் சரணடைவதாகத் தெரிவித்தனர்.

ஆனால் அதுவரை காவல் துறை தரப்பில் வழக்கு எதுவும் பதிவு செய்யாததால் எந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் விவாதித்தனர்.அதுவரை ராஜூ சகோதரர்கள் இருவரும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராஜு முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அவர் மீது சிபிசிஐடி போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்திருந்த போதிலும்,பின்னர் சத்யம் முதலீட்டாளர் ஒருவரது புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜுவைக் கைது செய்தனர்.

இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 409 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 468 மற்றும் 471 (ஏமாற்று), 120 பி (கிரிமினல் சதி), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ராஜு மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மாலை 4 மணிக்கு சத்யம் தலைமை அலுவலகத்தில் செபி விசாரணைக் குழு முன்பு ஆஜரான ராஜூ, தனது முறைகேடுகளை ஒப்புக் கொண்டார். சத்யம் நிறுவனத்தில் ரூ.7000 கோடி வரை மோசடி செய்ததை ஒப்புக் கொள்வதாக ராமலிங்க ராஜுவும், ராம ராஜுவும் போலீசார் முன்பாக வாக்குமூலம் கொடுத்தனர்.இதைத் தொடர்ந்தே ராஜூ மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே நேற்று தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்ட சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான சீனிவாஸ் வடால்மணியும் இன்று கைது செய்யப்படுவார் என சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.




(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாரத் பெட்ரோலியம் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
எண்ணெய் அதிகாரிகள் ஸ்டிரைக் : கடும் நடவடிக்கைக்கு உத்தரவு
லாரி ஸ்டிரைக் : காய்கறி விலை 2 மடங்கு ஆனது!
லாரி ஸ்டிரைக் : 'எஸ்மா' சட்டம் பாய்ந்தது
சத்யம் தலைமை நிதி அதிகாரி தற்கொலை முயற்சி
நந்திகிராம் இடைத்தேர்தல் : திரிணமுல் காங்கிரஸ் வெற்றி!
செய்திகள்
தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...