|
| பாரத் பெட்ரோலியம் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 9 ஜனவரி 2009 ( 16:49 IST ) | |
மத்திய அரசின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன எண்ணெய் அதிகாரிகள் தங்களது வேலைநிறுத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
லாரி வேலைநிறுத்ததைத் தொடர்ந்து பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளும் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் பெட்ரோல்- டீசல் வினியோகம் வெகுவாகத் தடை பட்டது.
இதையடுத்து பெட்ரோல் பங்க்குகளில் இருப்பு தீர்ந்து, அவை மூடப்பட்டு வருகின்றன. இதனால் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கும் அபாயமும், தினசரி பலகோடி ரூபாய் வர்த்தக இழப்பையும் சந்திக்க நேரிட்டுள்ளது.
இதற்கிடையே, பணிக்கு திரும்புமாறு எண்ணெய் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதற்கு அவர்கள் உடன்படாததையடுத்து வேலைநிறுத்தம் செய்வோர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
மேலும், ராணுவ உதவியுடன் பெட்ரோல்- டீசல் வினியோகத்தைத் தொடங்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், மத்திய அரசின் உறுதியான, கடும் நடவடிக்கையைத் தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் தங்களது வேலைநிறுத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று கொண்டுள்ளனர்.
இது குறித்து அதன் இயக்குனர் (மார்க்கெட்டிங்) ராதாகிருஷ்ணன் கூறுகையில், இன்று மாலைக்குள் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு திரும்பி விடுவார்கள். மார்க்கெட்டிங் பிரிவில் 70 சதவீதம் பேர் திரும்பியுள்ளனர். தற்போதையை தேக்கத்தை போக்க சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பணியாற்றுவார்கள்' என்றார்.
நாட்டின் மொத்த பெட்ரோலியப் பொருட்கள் தேவையில், 25 சதவீதத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் வழக்கம்போல் செயல்படுவதாகவும், .பாரத் பெட்ரோலியம் 70 சதவீத பணியாளர்களின் வருகையுடன் இன்று காலை முதல் செயல்படுவதாகவும். இதில் மேலும் முன்னேற்றம் ஏற்படலாம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதனால் பெட்ரோலியத் துறை அதிகாரிகளின் போராட்டம் படிப்படியாக வாபஸ் ஆகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|